எதிர்ப்புகளால் 2k கிட்ஸ் மத்தியில் வேகமாக வளரும் தலைவர் – பெரியார்

90களில் பிரபலமாக இருந்த எத்தனையோ தலைவர்கள் இரண்டாயிரத்தில் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஆனால், 90 களில் பிரபலமாக இருந்து, இரண்டாயிரத்தில் 2k kids-ஆல் இன்னும் அதிக பிரபலமாக பார்க்கப்படும் ஒரு தலைவர்.

“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்” என்றார் புரட்சிக்கவிஞர்.

“யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், ஏன் நானே சொன்னாலும் உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே”.

பெரியாரின் இந்த வார்த்தை தான் தமிழகத்தில் பகுத்தறிவாளிகள் பெருக காரணம்.

இப்போது இருக்கும் எந்த அரசியல் தலைவருக்கும் அவர்தான் ஆரம்பப் பள்ளி. காலத்திற்கேற்றார்போல அரசியல்வாதிகள் மாறலாம். ஆனால், தலைவர்கள் மாறுவதில்லை.

பெரியாரின் கொள்கைகளையோ, போராட்டத்தையோ தவறு என்று யாராலும் எக்காலத்திலும் வாதிட வே முடியாது. அதுதான் பெரியாரின் வெற்றி.

இந்தியா வரலாற்றில் எந்த தலைவராலும் செய்ய முடியாததை எப்படி பெரியார் செய்தார்? அதை தான் இந்த காணொளியில் பார்க்க போகிறோம்.

இப்போதும் சாதியாலும், மதத்தாலும் மனுஷனை பிரித்து ஆதிக்கம் செய்யும் சாதியவாதி, மதவாதி என யாராக இருந்தாலும் தனது தடியால் முதலில் அவருக்கு அடி கொடுத்திருப்பார்.
பெரியார் என்ன பெரிய ஆளா? அவர் இந்துக்களை தானே எதிர்த்தார். முஸ்லீம்களையோ, கிறித்துவர்களையோ எதிர்க்கவில்லையே என்று தற்போது இருக்கும் மதவாத கட்சி கதறிக் கொண்டு இருக்கிறது.

“ஒரு பெரிய நாடு சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் நான் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன்.

அந்த சிறிய நாட்டில் ஒரு பெரிய மதம் இருந்து மற்ற சிறுபான்மை மதத்தை ஒடுக்கினால் நான் சிறுபான்மை மதத்தின் பக்கமே நிற்பேன்,

‘அந்த சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான் தாக்குதலுக்குள்ளான அந்த ‘சாதியின் பக்கமே நிற்பேன்.

‘அந்த ஒடுக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு ‘முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன்.

அந்த தொழிலாளி வீட்டிற்கு போய் அவன் மனைவியிடம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த பெண்ணிற்க்காக நான் நிற்பேன்.

மொத்தத்தில் ‘ஆதிக்கம்தான் அவரின் எதிரி. அவரே பெரியார்.

மனுஷர்களை மனுதர்மத்தின் படி பிரித்து ஆதிக்கம் செய்த பார்ப்பனர்களை எதிர்த்தவர் பெரியார். தீண்டாமை என்னும் பார்ப்பன கொள்கைகளை எதிர்த்தவர் பெரியார். தங்களை மேல் சாதி என்றும், மற்றவர்களை கீழ் சாதி என்றும் சொன்ன அந்த எண்ணத்தை எதிர்த்தவர் பெரியார். மனுஷனை மனுஷனாக பார்க்காமல் ஒடுக்கிய அந்த பார்ப்பானை தான், பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி” என்றார்.

அத்தனை பார்ப்பானையுமா எதிர்த்தார் பெரியார்?

இல்லை. தானும் சுயமரியாதையோடு இருந்து மற்றவர்களையும் மரியாதையோடு நடத்திய பார்ப்பான்களை புகழ்ந்தவர் பெரியார். அவ்வளவு ஏன்? ஆதிக்க மனப்பாங்கோடு இருந்த பார்ப்பான்களை எதிர்த்த பெரியார், எதிர்காலத்தில் திராவிடர்கள் உங்களை ஒடுக்கினால் உங்களுக்காகவும் நான் போராடுவேன் என்றார்.

ஆனால், இப்போது இருக்கும் மதவாத கட்சியோ, இந்துக்களை எதிர்த்த ராமசாமியை தலையில் தூக்கி வெச்சி கொண்டாடுதே இந்த தமிழகம் என்று வயிறு எரிகிறார்கள்.
இந்துக்களை அல்ல பார்ப்பனர்களை, சாதி வெறியை, மத வெறியை, ஆணதிக்கத்தை, பெண்ணடிமை, அடிமைத்தனத்தை, கடவுளை என அத்தனையும் எதிர்த்தார். அத்தனையையும் கேள்விக்குள்ளாக்கினார்.

கல்வி அறிவும், சுயமரியாதையும், பகுத்தறிவுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்பதை பெரியார் பெரிதாய் நம்பினார். அதற்காக போராடினார். மக்களை தனது கூரிய சொற்களால் திரட்டி போராடவும் செய்தார்.

அவர் காலத்தில் டாக்டர் பட்டம் படிக்க சமஸ்கிருதம் அவசியம் என்ற பார்ப்பனர்களின் நயவஞ்சகத்தை கடும் போராட்டத்தால் முறியடித்தவர் பெரியார். அதன் பிறகே அனைத்து சாதியினருக்கும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. இப்போது பெரியார் இருந்திருந்தால் நீட்டை எதிர்த்தும் போராடி அதில் வென்றும் இருப்பார்.

“பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் அவர்களை அவர்களே முன்னேற்றிக் கொள்வார்கள் என்று பெண் கல்வியை அழுத்தமாக வலியுறுத்தினார்.

பிஜேபிக்கு ஏன் பெரியார் மீது இவ்வளவு கோபம்?

பிஜேபி எம்.பி ஒருவர், “பசு மாட்டின் மூத்திரம் கேன்சரை குணப்படுத்தும் என்றார்.

இன்னொரு பிஜேபி பிரபலம், “மரபணு ஆராய்ச்சி மற்றும் செயற்கை கருத்தரிப்பு மூலமாகத்தான் மகாபாரதத்தில் கவுரவர்கள் 100 பேர் ஒரே தாய்க்கு பிறந்தார்கள்” என்றார்.

மற்றுமொரு பிஜேபிகாரர், “மகாபாரத காலத்திலேயே இண்டெர்னெட் இருந்தது” என்று கூறினார்.

அவ்வளவு ஏன் “மகாபாரதத்தில் கர்ணன் அவர் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை. மகாபாரத காலத்திலேயே, ஜெனடிக் அறிவியல் வளர்ந்திருந்தது. அந்த அடிப்படையில்தான் கர்ணன், அவரின் தாயின் வயிற்றில் பிறக்காமல் வெளியில் பிறந்தார்”.

நாம் அனைவரும், பிள்ளையாரை வணங்குகிறோம். அந்த காலத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யும், அறுவை சிகிச்சை நிபுணர் இருந்ததால்தான், மனிதனின் உடலில் யானையின் தலையை வைக்க முடிந்தது”. இப்படியெல்லாம் சொன்னது பிரதமர் மோடி.

இப்படி ஆதாரமற்றதை பேசி மற்ற மாநிலத்தவர்களை நம்ப வைத்ததுபோல தமிழ்நாட்டு மக்களையும் நம்ப வைக்க முயற்சித்தது பிஜேபி.

எல்லாத்தையும் ஆராய்ந்து பகுத்தறியும் தமிழ்நாட்டில் இது நடக்காமல் போனது. அதற்கு காரணம் பகுத்தறிவு பகலவன் பெரியார் என்று தெரிந்ததால்தான் இருக்கும்போதும், இறந்தபிறகும் நம் உயிரை வாங்குகிறானே என்று பெரியாரை எதிர்க்கின்றனர் இந்த பிஜேபி மதவெறியர்கள்.

“சாமி கும்பிடுறேன் என்பதற்கு எதிரானது அல்ல பகுத்தறிவு; கும்பிடுறேன் சாமி என்பதற்கு எதிரானதே பகுத்தறிவு”. அப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியை தான் 2k kids தங்கள் ரோல் மாடலாக எடுக்கின்றனர்.

2k kids-ஐ பொறுத்தவரை அவர் தந்தை பெரியார் அல்ல. DUDE பெரியார்.

அரசியல்