ஒற்றைக் கட்சி ஆட்சி முறையின் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்னென்ன?


சாதகங்கள்:

 1. ஒரு கட்சி ஆட்சியில் திறமையாகவும், சுதந்திரமாகவும் விரைந்து செயல்பட முடியும்.
 2. அவசர மற்றும் ஆபத்தான பேரிடர் காலங்களில் உடனடியாக முடிவு எடுக்க முடியும்.
 3. அரசு எடுக்கும் முடிவுகளில் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு கொஞ்சம் கூட இருக்காது.
 4. ஆளும் கட்சி மக்கள் நலன் சார்ந்து இருக்குமானால் மக்கள் நலத் திட்டங்களை விரைந்தும், சிறப்பாகவும் செயல்படுத்த முடியும்.
 5. அனைத்து துறைகளிலும் அபார வளர்ச்சி ஏற்படும்.
 6. ஒரு கட்சி ஆட்சி என்பது செலவு குறைந்தது. அதுமட்டுமின்றி சிக்கனமானதும் கூட.

பாதகங்கள்:

 1. கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் வேறுபாடு இருக்காது.
 2. எதிர்கட்சி என்ற ஒன்றே இருக்காது.
 3. அரசின் திட்டம் தொடர்பான நாடு தழுவிய உரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் எழ வாய்ப்பு இல்லை.
 4. இரக்கமற்ற முறையில் மக்களுக்கான அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்.
 5. ஆளும் கட்சியில் ஊழல்வாதிகள் நிறைந்திருந்தால் அது நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சி அடைய காரணமாக இருக்கும்.
 6. திறமையற்ற தலைமையை கொண்ட கட்சியாக இருந்தால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களும் பெருமளவு பாதிக்கும்.
 7. கட்சி ஆட்சி சர்வாதிகார ஆட்சிக்கும் எதேச்சதிகாரத்துக்கும் வழிவகுக்கும்.
 8. நாட்டை ஆள்பவர்கள் எதேச்சதிகார எண்ணம் கொண்டிருந்தால் எதிர்கருத்து தெரிவிப்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள்.
 9. பல தேசிய இனக்குழுக்கள் அடங்கிய இந்தியா போன்ற நாட்டில் மாநில கட்சிகள் இல்லாமல் போனால் மாநில சுயாட்சி நசுக்கப்படும்.
 10. ஒரு கட்சி ஆட்சி முறையில் அந்த கட்சியின் நோக்கம் மற்றும் கொள்கைகள் மட்டுமே நாட்டின் கொள்கையாக மாறும்.
 11. ஒரு கட்சி ஆட்சி முறை கொண்டுவரப்பட்டால் இங்கு இருக்கும் பன்முகத்தன்மை முற்றிலும் அழிந்துவிடும்.

மொத்தத்தில் ஒரே கட்சி ஆட்சி முறை இந்தியா போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டிற்கு சாதகத்தை விட பாதகத்தை அதிகமாக ஏற்படுத்தும்.

அரசியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *