எழுச்சி – அறிமுகம்

சாமானிய மக்களின் தோழனாய், வெகுஜன மக்கள் கேட்க தயங்கும் கேள்விகளைத் தைரியமாக, எவ்வித பாரபட்சமின்றி, மக்கள் பிரதிநிதியாய் கேட்கும் எங்கள் குரல் !

இளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல் சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..

அவ்வாறே பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார் .

சமூக வலைதளங்களின் வெகுவாக பரவி வரும் எங்களின் காணொளிகள் மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவையும் குறுகிய காலத்திற்குள் பெற்றுள்ளது என்பது எங்களுக்கு வரும் மிரட்டல்கள்,அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பதக்கங்களாக மின்னுகின்றது !

இந்த எழுச்சி குரல் ,என்றும் ஒலிக்கும் மக்கள் குரல் !

about-ezhuchi

எழுச்சி – நோக்கம்

எங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ” .

தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் !

தமிழகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ,அதிருப்திகளுக்கும் வேராய் இருப்பது ஊழல் மிகுந்த அரசாங்கமே, அரசு சரியாக செயல்பட்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னாலே தீர்வு கிடைத்துவிடும் என்பதே எங்களின் நம்பிக்கை .

யார் கேட்கப் போகிறார்கள் என்று பேசும், செயல்படும் சிலரை, கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று அநீதிக்கு எதிராய் எப்பொழுதும் அசராமல் விடப்படுகின்றன எங்கள் கேள்விக்கனைகள் !

அவ்வாறே ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி !

எங்கள் முன்னோடிகளான இவர்களின் கொள்கைகளே எங்களை வழிநடத்துகின்றது .

_

பாரதியார்

CV6z8dBWwAABJi7
இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூகச் சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடையப் பாட்டுகளின் மூலமாக சீர்திருத்த சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் .முண்டாசு கவி பார்க்க விரும்பிய தமிழகமே எங்கள் கனவும் !
_

காமராஜர்

resize_image
இந்தியாவின் “கிங் மேக்கர்“ என்று அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்த ஒன்பது ஆண்டுகளும் தமிழகத்தின் பொற்காலம் என்றே கருதப்படுகிறது. தன்னுடைய உழைப்பால்,தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர் தமிழகத்தின் கல்வி கண்ணை திறந்தவர் . தன்னலமிலா தலைவராக திகழ்ந்த இவர் எல்லாருக்கும் பிடித்த முதல்வர் என்பது எவரும் மறுக்க முடியா கருத்து !
_

ஏ.பி.ஜே அப்துல் கலாம்

6398821971_1fdf94ef4e_b
“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் “ என்று சொன்னவரே அந்த கூற்றுக்கு எடுத்துக்காட்டை வாழ்ந்து காட்டினார். தமிழக இளைஞர்களின் மிகவும் பிடித்த நபர்களுள் இவருக்கே முதல் இடம் . இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி ,இந்தியாவின்11 வது குடியரசு தலைவர்,இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படும் இவர் தமிழக மக்களின் மனதில் எழுச்சி அக்கினியை விதைத்துச் சென்றார் என்று சொன்னால் மிகையாகாது !