தேர்தல் களம்

தமிழக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – 2019

தமிழக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – 2019

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 39 தொகுதிகளில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. கூடவே 18 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 72 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் இறப்புக்கு பின் நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால், தமிழக அரசியல் களம் மிகுந்த பரபரப்பாக இருந்தது. தேர்தல் முடிவுகளும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

இந்த நிலையில், தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக அமைந்தன. தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இவர் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரருமான ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஆவார்.

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த குற்றச்சாட்டுகளால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, பின்பு ஆகஸ்ட் மாதத்தில் தனியாக வாக்குப்பதிவு நடந்த வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தைக் காட்டிலும் 8,141 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இடைத்தேர்தல் முடிவுகள்

22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றியை உறுதி செய்ததால், ஆட்சிக்கு அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது. 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் (தொகுதிகள் 38 +1 = 39)

அரக்கோணம் – எஸ்.ஜெகத் ரட்சகன் (திமுக)
ஆரணி – எம் கே விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)
மத்திய சென்னை – தயாநிதி மாறன் (திமுக)
வட சென்னை – கலாநிதி வீராசாமி (திமுக)
தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
சிதம்பரம் – திருமாவளவன் (விசிக )
கோயம்புத்தூர் – பி.ஆர். நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
கடலூர் – டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் (திமுக)
தருமபுரி – செந்தில் குமார் (திமுக)
திண்டுக்கல் – வேலுசாமி (திமுக)
ஈரோடு – அ.கணேசமூர்த்தி (மதிமுக – திமுக சின்னம் )
கள்ளக்குறிச்சி – கவுதம் சிகாமணி (திமுக)
காஞ்சிபுரம் – ஜி.செல்வம் (திமுக)
கன்னியாகுமரி – ஹெச். வசந்த குமார் (காங்கிரஸ்)
கரூர் – ஜோதிமணி (காங்கிரஸ்)
கிருஷ்ணகிரி – டாக்டர் ஏ. செல்லகுமார் (காங்கிரஸ்)
மதுரை – சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
மயிலாடுதுறை – எஸ். ராமலிங்கம் (திமுக)
நாகப்பட்டினம் – எம்.செலவராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்)
நாமக்கல் – ஏ.கே.பி. சின்ராசு (கொமுதேக – திமுக சின்னம் )
நீலகிரி – ஆ.ராசா (திமுக)
பெரம்பலூர் – டி.ஆர். பச்சமுத்து (ஐ.ஜே.கே – திமுக சின்னம் )
பொள்ளாச்சி – சண்முக சுந்தரம் (திமுக)
ராமநாதபுரம் – நாவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் )
சேலம் – எஸ்.ஆர். பார்த்திபன் (திமுக)
சிவகங்கை – கார்த்தி சிதம்பம் (காங்கிரஸ்)
ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு (திமுக)
தென்காசி – தனுஷ் எம்.குமார் (திமுக)
தஞ்சாவூர் – எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (திமுக)
தேனி – ரவீந்திர நாத் குமார் (அதிமுக)
திருவள்ளூர் – கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்)
தூத்துக்குடி – கனிமொழி (திமுக)
திருச்சி – திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)
திருநெல்வேலி – ஞானதிரவியம் (திமுக)
திருப்பூர் – சுப்பராயன் – (இந்திய கம்யூனிஸ்ட்)
திருவண்ணாமலை – அண்ணாதுரை சி.என் (திமுக)
விழுப்புரம் – டி.ரவிக்குமார் ( விசிக – திமுக சின்னம் )
விருதுநகர் – மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)

வேலூர் – கதிர் ஆனந்த் ( திமுக)

==============================

நிமிர்ந்து பார்க்க வைத்த 3 வது இடம்

நாம் தமிழர் கட்சி

காஞ்சிபுரம், கன்னியாகுமாரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய 7 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தது நாம் தமிழர் கட்சி.

மக்கள் நீதி மய்யம்

தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர் தவிர்த்து மொத்தம் 36 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

1.மத்திய சென்னை (92249),

  1. வட சென்னை (103167)
  2. தென் சென்னை (135465)
  3. கோவை (145104)
  4. ஈரோடு (47719)
  5. நீலகிரி (41169)
  6. பொள்ளாச்சி (59693)
  7. சேலம் (58662)
  8. ஸ்ரீபெரும்புதூர் (135525)
  9. திருவள்ளூர் (73731)
  10. திருப்பூர் (64657)

இக்கட்சி தமிழகத்தில் 36 தொகுதியில் போட்டியிட்டு பெற்ற மொத்த வாக்குகள் 15,75,620. மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்கு சதவீதம் 3.63 % ஆகும்.

அதேபோன்று, புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர்.எம்.ஏ.எஸ் சுப்ரமணியன் 38,068 (4.81%) வாக்குகளை பெற்றார்.

About Author

Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *