எழுச்சி பார்வை

அண்ணா பல்கலைக்கழகம்: இந்த முடிவை அரசு முன்னரே எடுத்திருக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகம்: இந்த முடிவை அரசு முன்னரே எடுத்திருக்கலாம்!

ண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என முடிவு செய்திருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது அண்ணா பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்கும் ஒரு உறுதியான நடவடிக்கை ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே உலகத் தரத்துடன்தான் உள்ளது என்பதற்கு புதிய சான்று ஏதும் தரத் தேவையில்லை. 2017 ஆம் ஆண்டில், இந்திய அளவில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகத்திலிருந்து அமெரிக்கா செல்வதற்கு H1B விசா வாங்கியவர்களில் முதலிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் என்ற ஒரு புள்ளி விவரமே போதும். அந்த ஆண்டில் இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பயின்று H1B விசா வாங்கியவர்களில் 850 மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், ‘சிறப்பு அந்தஸ்து தருகிறோம்… நிதி பங்களிப்பு செய்யுங்கள்’என்ற தூண்டிலுடன் மத்திய அரசு இத்திட்டத்தை முன் வைத்தபோது, மேற்குவங்கம் எப்படி தனது ஜபல்பூர் பல்கலைக்கழகத்தை இழக்க விரும்பாமல், ‘நிதி இல்லை’ என நழுவிக் கொண்டதோ, அதையே தமிழக அரசும் செய்திருக்க வேண்டும். அப்போது அத்தகைய நிலைப்பாட்டை நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்ததால்தான், துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி, அது சர்ச்சையாகும் அளவுக்கு நிலைமை சென்றது.

“சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி கட்டணம் அதிகரிக்கும்.சிறப்பு அந்தஸ்தால் என்ன கிடைக்குமோ அதை மாநில அரசாலேயே செய்ய முடியும். இடஒதுக்கீடு பாதிக்கப்படவும், கட்டண உயர்வுக்கும் தமிழக அரசு துணை போகாது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. துணை வேந்தர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே சமயம் இந்த நிலைப்பாட்டில், தமிழக அரசு உறுதியாக நிற்க வேண்டும். மத்தியிலிருந்து வரும் எந்த ஒரு நிர்பந்தத்துக்கும் அடி பணிந்துவிடக் கூடாது!

About Author

மேகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *