தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆவாரா சகாயம்… அதிரடி அரசியல் பிரவேசம்…

தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆவாரா சகாயம்… அதிரடி அரசியல் பிரவேசம்…

தலைநகர் டெல்லி அரசியலில் அதிரடி திருப்பத்தை உருவக்கியவர் அர்விந்த் கெஜ்ரிவால். ஐ.ஆர் எஸ் அதிகாரியான கெஜ்ரிவால், ஆம் அத்மி கட்சியைத் தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியைப்  பிடித்தார்.  இதேபோல்  தமிழகத்திலும் பிரபலமான, நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி அரசியலில் குதித்துள்ளார். அவர்தான் சகாயம். கடந்த ஆண்டு அவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இளைஞர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள சகாயம், மக்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்ததாலேயே அரசியலுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.  சென்னை, ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் […]

Read More
 ச்சீ.. ச்சீ ..ச்சீ இந்தப்பழம் புளிக்கும். விரக்தியில் விஜயகாந்த்..

ச்சீ.. ச்சீ ..ச்சீ இந்தப்பழம் புளிக்கும். விரக்தியில் விஜயகாந்த்..

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர் 234 தொகுதிகளிலும் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில்  பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து வழங்கலாம் […]

Read More
 பெயிலான ஓ.பி.எஸ்.. ஜெயலலிதா சர்டிபிகேட்

பெயிலான ஓ.பி.எஸ்.. ஜெயலலிதா சர்டிபிகேட்

ஓபிஎஸ் நிர்வாகத் திறமையற்றவர் என்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதமே சான்று என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம்,  உத்தமபாளையத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், ஓபிஎஸ் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏன் தொகுதிக்கும் கூட ஒன்றும் செய்யவில்லை என்று சாடினார். இவரை இரண்டு முறை முதல்வராக்கிய ஜெயலலிதாவுக்கும் மூன்றாவது முறையாக முதல்வராக்கிய சசிகலாவிற்கும் ஓபிஎஸ் உண்மையாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.  ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது […]

Read More
 மதுக்கடை வருமானம்! அரசுக்கு அவமானம்!!

மதுக்கடை வருமானம்! அரசுக்கு அவமானம்!!

மதுக்கடைகள் மூலம் வருகின்ற வருமானம் அரசுக்கு மிகப்பெரிய அவமானம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  போதை பழக்கத்தால் குற்றங்கள் பெருகும் என்று குற்றம்சாட்டி இருக்கிறார் . மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து,  அதை இந்த அரசு மறந்துவிட்டது. மது விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டியதில்லை. இதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இலக்கு நிர்ணயிக்க வேண்டிய தொழிலும் இல்லை. கல்வி, சுகாதாரம் […]

Read More
 நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா நாராயணசாமி?

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா நாராயணசாமி?

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வருகிற 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று  ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கெடு விதித்துள்ளார். பதவியேற்ற முதல் நாளிலேயே அவர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியில் 15 எம்எல்ஏக்கள், திமுகவில் 3 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் என 19 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நாராயணசாமி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பாகூர் […]

Read More
 உழவுத் தொழில் காக்க உயிர் துறப்போம்! எச்சரிக்கும் விவசாயிகள்….

உழவுத் தொழில் காக்க உயிர் துறப்போம்! எச்சரிக்கும் விவசாயிகள்….

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப்,  ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இப்போராட்டம் நடைபெற்றது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இப்போராட்டம் முழுவீச்சில் நடைபெற்றது. லூதியானா அமிர்தசரஸ் உள்ளிட்ட  இடங்களில் போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தார்கள். ஜலந்தர் கன்டோன்மென்ட் ஜம்மு வழித்தடத்திலும் மொகாலி மாவட்டத்திலும் மறியலில் ஈடுபட்டனர். அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்ரா பானிபட் […]

Read More
 எங்கெங்கும் வட இந்தியர்கள்! ஆக்கிரமிக்கப்படும் தமிழகம்!

எங்கெங்கும் வட இந்தியர்கள்! ஆக்கிரமிக்கப்படும் தமிழகம்!

தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்திலும் இப்படியான ஒரு சூழல் கிடையாது..!  ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில் – மக்கள் செல்வாக்கோ, ஆளுமையோ இல்லாத ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் தலைமைக்கு தமிழக அரசின் அதிகாரம் கைமாறியதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5 சதவிகிதம் வட மாநிலத்தவர் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம்…அனைத்தும் வட இந்தியர் வசம் சென்று கொண்டுள்ளதை கவனப்படுத்துகிறது இந்த கட்டுரை! ஆனால், இது குறித்த தமிழக மக்களின் […]

Read More
 பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்….காங்கிரஸ் அமோக வெற்றி!

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்….காங்கிரஸ் அமோக வெற்றி!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 14ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 8 மாநகராட்சிகள், 109 நகராட்சிகளில் வாக்குப்பதிவு  நடந்தது. 2302 வார்டுகளில் வாக்குப்பதிவு நடந்தேறியது .9222 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் 2832 பேர் சுயேச்சைகள் ஆவர். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில்  கூட்டணியை முறித்துக் கொண்ட பாரதிய ஜனதாவும் அகாலிதளம் கட்சியும் […]

Read More
 எகிறும் விலை உயர்வு!எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!!

எகிறும் விலை உயர்வு!எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!!

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.  நாடு முழுவதும் நேற்று 9வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சில இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகளை அன்றாடம் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது. அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து இதுவரை 21 நாட்கள் […]

Read More
 திமுகவில்  விருப்பமனு விறுவிறு…

திமுகவில் விருப்பமனு விறுவிறு…

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கு விருப்பமனு  வினியோகம் நேற்று தொடங்கியது.  ஒரே நாளில் ஆயிரத்து 450 பேர் விருப்பமனு வாங்கினர் .  விருப்பமனு விண்ணப்பத்தில்  கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு….  சட்டமன்றத் தொகுதியின் பெயர் என்ன? விண்ணப்பதாரர் பெயர் என்ன?  விண்ணப்பதாரரின் வயது என்ன?  விண்ணப்பதாரர் பிறந்த தேதி என்ன ? விண்ணப்பதாரரின் தந்தை அல்லது கணவர் பெயர் என்ன ? விண்ணப்பதாரர் செய்யும் தொழில் ? கல்வித்தகுதி?  திமுகவில் உறுப்பினராக எந்த ஆண்டு முதல் இருக்கிறீர்கள்? […]

Read More