சர்ச்சையில் சிக்கிய நகை கடை விளம்பரம்… சகிப்புத்தன்மைக்கு குட்பை!

சர்ச்சையில் சிக்கிய நகை கடை விளம்பரம்… சகிப்புத்தன்மைக்கு குட்பை!

டாடா குழுமத்துக்குச் சொந்தமான டைட்டன் நிறுவனத்தின் நகை அணிகலன்கள் நிறுவனமான தனிஷ்க் ( Tanishq), ஒரு விளம்பரத்தைத் தயாரித்து இருந்தது. ‘ஒற்றுமை’ எனப்பொருள்படும் ‘ஏகத்வம்’ எனும் பெயரிடப்பட்ட அந்த விளம்பரத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம், தங்கள் கர்ப்பிணி மருமகளுக்காக ஒரு பாரம்பரிய இந்து வளைகாப்பு விழாவைக் கொண்டாடுவதை அந்த நிறுவனத்தில் விளம்பரத்தில் தனிஷ்க் காட்டி இருந்தது. அந்த வளைகாப்பு நிகழ்ச்சி முழுவதும் இந்து முறைப்படி அமைந்து இருக்கிறது. “இது போன்ற சம்பிரதாயங்களை நீங்கள் கடைப்பிடிக்க மாட்டீர்களே” என […]

Read More
 அண்ணா பல்கலைக்கழகம்: உலக தரத்துக்கு ஆசைப்பட்டு உரிமையை இழக்கலாமா?

அண்ணா பல்கலைக்கழகம்: உலக தரத்துக்கு ஆசைப்பட்டு உரிமையை இழக்கலாமா?

இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தர வரிசைப் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டுமென்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு IoE( (Institute ofEminence ) என்ற திட்டத்தை 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இந்த சிறப்புத் தகுதி திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 8 மத்திய அரசினுடையது 2 மாநில அரசினுடையது. அதில் ஒன்றுதான் அண்ணா பல்கலைக்கழகம். IoE தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு மாணவர் எண்ணிக்கையில் 30% வெளிநாட்டு […]

Read More
 அசிங்கப்பட்ட அர்னாப்… அம்பலமான டிஆர்பி தில்லுமுல்லு!

அசிங்கப்பட்ட அர்னாப்… அம்பலமான டிஆர்பி தில்லுமுல்லு!

அர்னாப் கோஸ்வாமிக்கு அறிமுகம் தேவையில்லை. ஆரம்ப காலத்தில் என்டிடிவி, பின்னர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றி, தற்போது சொந்தமாக ரிபப்ளிக் தொலைக்காட்சியை நடத்திக் கொண்டிருப்பவர். ‘மோடி டிவி’ என நாமகரணம் சூட்டப்படாத குறை ஒன்றுதான். மற்றபடி அந்த சேனலில் சொல்லப்படும் செய்திகள் ஆகட்டும், நடக்கும் விவாதங்கள் ஆகட்டும்… அனைத்துமே பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் துதிபாடுபவையாகவே இருக்கும். “நம்ம ஊரிலும்தான் ஜெயா, கலைஞர் தொலைக்காட்சி, நியூஸ் ஜெ மற்றும் மக்கள் தொலைக்காட்சி என கட்சி சார்ந்து சேனல்கள் இருக்கின்றன. […]

Read More
 நீண்ட பதவிக் காலம்  மட்டுமே மோடியின் சாதனை ஆகாது!

நீண்ட பதவிக் காலம் மட்டுமே மோடியின் சாதனை ஆகாது!

பிரதமர் மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத பிரதமர் எனப் பெருமிதப்படுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். கூடவே, குஜராத் முதல்வராக அவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த காலத்தையும் கணக்கிட்டு, அரசின் நிர்வாக தலைவராக தொடர்ந்து 19 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 20 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அரசியல் தலைவர் என்றும் அவரைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்த சாதனையால் குஜராத் மாநிலத்துக்கும் இந்த நாட்டுக்கும் கிடைத்த நன்மை என்ன என்று […]

Read More
 அதிமுக வழிகாட்டுதல்  குழு: சரண்டர் ஓபிஎஸ்… சாதித்த எடப்பாடி!

அதிமுக வழிகாட்டுதல் குழு: சரண்டர் ஓபிஎஸ்… சாதித்த எடப்பாடி!

ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக ஆட்சி முடியும் வரையில் ‘முதல்வர் நாற்காலி’யில் அமரலாம்’ என்கிற ஓ. பன்னீர் செல்வத்தின் கனவு, அடுத்த முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதால் தகர்ந்தது. சசிகலா முதல்வர் ஆவதற்காகப் பன்னீர்செல்வம், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த 48 மணி நேரத்தில் பாஜக புள்ளி ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ‘தர்மயுத்தம்’ தொடங்கினார் ஓபிஎஸ். ‘அவமானப்படுத்தப்பட்டேன். கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினார்கள்” எனச் சொல்லி சசிகலாவுக்கு எதிராகப் போர்க் […]

Read More
 தமிழக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – 2019

தமிழக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – 2019

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 39 தொகுதிகளில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. கூடவே 18 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 72 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் இறப்புக்கு பின் நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால், தமிழக அரசியல் களம் மிகுந்த பரபரப்பாக இருந்தது. தேர்தல் முடிவுகளும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த […]

Read More