எழுச்சி பார்வை

டிஆர்பி மோசடி: டெல்லிக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றவா சிபிஐ?

டிஆர்பி மோசடி: டெல்லிக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றவா சிபிஐ?

TRP Manipulation: UP Police Register Separate FIR, Case Handed Over to CBI

இந்த முறையும் அப்படி உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால், ஏனோ ” உயர் நீதிமன்றத்துக்கு முதலில் செல்லுங்கள்..!” என கை காட்டி விட்டது உச்ச நீதிமன்றம்.

ஆனால், தனக்கு எதிரான வழக்கை டெல்லிக்கு நகர்த்துவதிலேயே குறியாக இருந்த அந்த நபர், மேலிடத்தில் முறையிடுகிறார். அங்கிருந்து வந்த உத்தரவின் பேரில், அதேபோன்றதொரு குற்றம், தங்கள் மாநிலத்திலும் நடந்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது, டெல்லி கட்சி ஆட்சி நடக்கும் இன்னொரு மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. அத்துடன் அவ்வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுக்கிறது. கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டுவிட்டது. தற்போது எதிர்க்கட்சி மாநில அரசு பதிவு செய்த வழக்கு விவகாரங்களும் சிபிஐ வசம் போகும் என்பதால், தொலைக்காட்சி பிரமுகர் காப்பாற்றப்பட்டு விடுகிறார்.

அந்த பிரமுகர் அர்னாப் கோஸ்வாமி. வழக்கு டிஆர்பி ரேட்டிங் மோசடி தொடர்பானது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பைதான் வழக்கு நடக்கும் இடம்.

பாலிவுட நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு விவகாரத்திலும் இதேபோன்றுதான் மகாராஷ்டிரா காவல்துறை அவ்வழக்கை விசாரிப்பதை தடுக்கும் விதமாக, சுஷாந்த் கொலை செய்யப்பட்டதாக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் அவ்விரு மாநில காவல்துறையும் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவ்வழக்குகள் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

டெல்லி ஆட்சிக்கு எதிராக பேசுபவர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர்களை முடக்கவும், மாநில அரசை மீறி கைது செய்யவும் NIA (National Investigation Agency) எனும் தேசிய புலனாய்வு முகமையும், UAPA (Unlawful Activities Prevention Act) எனும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமும் பயன்படுத்தப்படுகின்றன.

இன்னொருபுறம் தங்களுக்கு வேண்டியவர்கள் மீது வழக்கு என்றால், அவர்களை காப்பாற்ற சிபிஐ-யைப் பயன்படுத்தும் உத்தி. இது என்ன விதமான பாணி?

மாநில காவல்துறையையும் நீதிமன்றங்களையும் சிதைக்கும் இந்த போக்கு மிக ஆபத்தானது… இந்த போக்கு நீடித்தால் நீதி பரிபாலன முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்..!

About Author

மேகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *